லண்டனில் இருந்து இலங்கை சென்ற பெண் சடலமாக மீட்பு!

Nila
4 years ago
 லண்டனில் இருந்து இலங்கை சென்ற பெண் சடலமாக மீட்பு!

லண்டனில் இருந்து இலங்கையில் சென்ற பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
 
வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் குடும்ப பெண்ணின் சடலமொன்று  மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
குறித்த பெண்ணின் கணவரும், இரு பிள்ளைகளும் லண்டனில் வசித்து வந்த நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் இலங்கை வருகை தந்து வவுனியா, தோணிக்கல், ஆலடி வீதியில் வசித்து வந்துள்ளர்.
 
இந்த நிலையிலேயே அவரது சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
வீட்டில் இருந்த குறித்த பெண்ணை காணவில்லை என உறவினர்கள் தேடிய போது கிணற்றிலிருந்து சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
அப்பகுதி இளைஞர்கள், பொது மக்களின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதன்போது 30 வயதுடைய இந்துஜா என்ற பெண்ணே இவ்வாறு மீட்கபட்டுள்ளார். 
 
அவரது சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4