இரு வாரங்களுக்குள் ஐந்து எரிபொருள் கப்பல்கள் இலங்கையை வந்தடையும்

Prabha Praneetha
2 years ago
இரு வாரங்களுக்குள் ஐந்து எரிபொருள் கப்பல்கள் இலங்கையை வந்தடையும்

அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்குள் ஐந்து எரிபொருள் கப்பல்கள் இலங்கையை வந்தடையும் என்று எரிபொருள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

11ம் திகதி தொடக்கம் 22ம் திகதி வரையான 12 நாட்களுக்குள் குறித்த ஐந்து கப்பல்களையும் வரவழைக்க எதிர்பார்த்திருப்பதாகவும் மின்சக்தி மற்றும் எரிபொருள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்றைய தினமும் நாளையும் பெற்றோல் மற்றும் டீசல் ஏற்றிய கப்பல்கள் இரண்டும், 16ம் திகதி இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் வரும் கடைசி டீசல் கப்பலும், 20ம் திகதிக்கு முன்னதாக கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல் ஒன்றும், 22ம் திகதி இன்னொரு பெற்றோல் ஏற்றிய கப்பலும் இலங்கை வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு இலங்கையில் டீசல் தேவை ஐயாயிரம் மெட்ரிக் தொன்னாக இருக்கின்றது. கடந்த நாட்களில் 2800 - 3000 மெட்ரிக் தொன் வரையில் நாளாந்தம் டீசல் வழங்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!