இலங்கை மக்களுக்கு காய்ச்சல் தொடர்பில் விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

Nila
4 years ago
இலங்கை மக்களுக்கு காய்ச்சல் தொடர்பில் விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

நாட்டில் தற்போது மக்களிடையே இந்த நாட்களில் ஒருவருக்கு காய்ச்சல், உடல்வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெறுமாறு தேசிய தொற்று நோய்களுக்கான மையத்தின் பிசியோதெரபிஸ்ட் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒருவருக்கு காய்ச்சல் அல்லது உடல்வலி ஏற்படும் பட்சத்தில் பெரசிட்டமோல் தவிர வேறு எந்த வலி நிவாரணி மருந்துகளையும் உட்கொள்ள வேண்டாம் எனவும் விரைவாக இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.

அதேவேளை நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதோடு கடந்த 08 நாட்களில் மாத்திரம் 2,500 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, யாழ்ப்பாணம், இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4