வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு பல புதிய அறிவிப்புகளை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Kanimoli
1 year ago
வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு பல புதிய அறிவிப்புகளை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தற்போது அதிக அளவில் மக்கள் பயன்படுத்தி வரும் செயலியான பகிரி (வாட்ஸ் அப்) பயனாளர்களுக்கு பல புதிய அறிவிப்புகளை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த புதுப்பித்தல்களை அடுத்த 24 மணி நேரத்திற்குள் பயனர்கள் பயன்படுத்தலாம் என்றும் அறிவித்துள்ளது.

ஒரே நேரத்தில் 32 பேர் கலந்துரையாடலாம் இதற்கு முன்பு ஒரே நேரத்தில் வாட்ஸ்-அப் குரல் அழைப்பில் 8 பேர் மட்டுமே இணைய முடியும் என்ற நிலையில் தற்போது ஒரே நேரத்தில் 32 பேர் கலந்துரையாடலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதுப்பித்தல்களில் வாட்ஸ் அப் குழுவில் 512 உறுப்பினர்களை சேர்க்க முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரையில் 256 உறுப்பினர்களை மாத்திரமே குழுவில் இணைத்து கொள்ள முடியுமாக இருந்த நிலையில் தற்போது 512 உறுப்பினர்களை இணைத்து கொள்ள முடியும் என அறிவித்துள்ளது. 

2ஜிபி வரையினாலான காணொளிகளின் பரிமாற்றங்களும் செய்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு அந்நிறுவனம் வழங்கியுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு இந்த புதுப்பித்தல்களை அடுத்த 24 மணி நேரத்திற்குள் பயனர்கள் பயன்படுத்தலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.