யாழில் தொடரும் பகீர் சம்பவங்கள்

Kanimoli
4 years ago
யாழில் தொடரும் பகீர் சம்பவங்கள்

யாழில் அண்மைய நாட்களாக வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில் இன்றிரவு 7.30 மணியளவில் (10-06-2022) பொன்னாலைப் பகுதியில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவத்தில் பொன்னாலையை சேர்ந்த கி.பூபாலரத்தினம் (வயது-57) இ. பகிரதன்(வயது -41)ஆகியோரே தாக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4