கொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை

Kanimoli
4 years ago
கொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை

கொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அமரகீர்த்தி அத்துகோரளவின் அனுதாபப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்

"அமரகீர்த்தி அத்துகோரள கொல்லப் பட்டதை ஊடகங்களில் வாயிலாக கண்டேன். அவர் 2 தடவை மாகாண சபைக்கு தெரிவானார். பிரதேச நலனுக்காக பங்காற்றினார். அவரின் அரசியல் பயணம் எதிர்பாராத கால கட்டத்தில் நிறைவடைந்தது.

ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு என விமர்சித் துக் கொண்டாலும் எமக்கு எவருடனும் தனிப்பட்ட குரோதம் கிடையாது. அவரின் கொலை தொடர்பில் துரித விசாரணை நடத்தி தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும். நாடாளுமன்றம் அவரின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4