17 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 22 வயதுடைய பெண்ணின் தந்தை

Kanimoli
4 years ago
17 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 22 வயதுடைய பெண்ணின் தந்தை

திருகோணமலை மாவட்டத்தில் நாமல் வத்த பகுதியில் 17 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 22 வயதுடைய பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் தர்சினி அண்ணாத்துரை முன்னிலையில் குறித்த நபரை முன்னிறுத்திய போது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

குறித்த நபர் குடும்ப தகராறு காரணமாக மது போதையில் மனைவியை தாக்கிய நிலையில் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் பக்கத்து வீட்டு 17 வயதுடைய சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று துஷ்பிரயோகம் மேற்கொண்டார் என  ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் அதே பகுதியை சேர்ந்த 22 வயதுடைய பெண்ணின் தந்தை எனவும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிய சிறுமி சிகிச்சை பெற்று வரும் நிலையில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4