பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி நியமிக்கப்படலாம்

Kanimoli
4 years ago
 பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி நியமிக்கப்படலாம்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி நியமிக்கப்படலாம் என அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன.

தொழிற்நுட்பம், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் ஆகிய புதிய அமைச்சுக்களை உருவாக்கி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தொழிற்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சசராக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்படலாம் எனவும் அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன.

தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அங்கத்துவதை பெற்றுக்கொண்டுள்ளதுடன் அவர் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4