புலம்பெயர் தமிழர்களை இலங்கைக்குள் ஈர்க்க பிரதமர் ரணில் நடவடிக்கை!

Nila
4 years ago
புலம்பெயர் தமிழர்களை இலங்கைக்குள் ஈர்க்க பிரதமர் ரணில் நடவடிக்கை!

புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் முதலீடுகளை பெற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் அச்சம் போக்கடிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க சார்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
 
ரணிலுடன் கலந்துரையாட நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவிற்கு நேற்று காலை அழைக்கப்பட்டிருந்தனர்.
 
இதன்போது புலம்பெயர் தமிழர்களை இலங்கைக்குள் ஈர்க்கும் நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. 
 
புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கு தயாராக உள்ளனர், ஆனால் கெடுபிடிகள் தொடர்பாக பாரிய அச்சத்தில் உள்ளார்கள், விமான நிலையத்தில் கூட புலம்பெயர் தமிழர்கள் துன்புறுத்தப்படுவது தொடர்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4