பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா அமைச்சுப் பொறுப்பை ஏற்பதில் சட்டச் சிக்கல்!

Mayoorikka
4 years ago
பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா  அமைச்சுப் பொறுப்பை ஏற்பதில் சட்டச் சிக்கல்!

பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேராவை பாராளுமன்ற உறுப்பினராக பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு சட்டரீதியாக தடை ஏற்பட்டுள்ளது.

தம்மிக்க பெரேரா பல வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளராகவும், பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் இருப்பதால், அவர் பாராளுமன்ற உறுப்பினராவதற்கு முன்னரே அவரை விலக்க வேண்டும்.
 
அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினராக உள்ள ஒருவருக்கு சொந்தமான நிறுவனம் அரசாங்கத்துடன் டீல் செய்தால் அந்த ஆசனம் இரத்து செய்யப்படும்.

தம்மிக்க பெரேரா தலைமைப் பொறுப்பை ஏற்பார் என்று முன்னர் வெளியான தகவல்களின் காரணமாக அவரது பல வர்த்தக நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

எவ்வாறாயினும், தம்மிக்க பெரேரா தொடர்பான சட்ட சிக்கல்கள் தீர்க்கப்படும் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, நாட்டின் அதிகாரம் மிக்க அமைச்சு ஒன்றை அவருக்கு வழங்குவதற்கு தயார்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதலீட்டுத் துறை அமைச்சராக அவர் பதவியேற்பார் என்று உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது ஜனாதிபதியின் கீழ் உள்ள பல விடயங்கள் அமைச்சுக்குள் சேர்க்கப்படும் எனவும் அவர் கூறினார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4