பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் கண்ணீர்ப்புகைத் தாக்குதல்

#SriLanka #Police #Lanka4
Shana
4 years ago
பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் கண்ணீர்ப்புகைத் தாக்குதல்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னிருந்து காலி முகத்திடல் நோக்கி எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் இவ்வாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டம் காரணமாக கொழும்பு கோட்டையைச் சுற்றியுள்ள பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4