தம்மைக் கைது செய்வதை தடுக்கக் கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை நிராகரிக்குமாறு கோரிக்கை

Prabha Praneetha
4 years ago
தம்மைக் கைது செய்வதை தடுக்கக் கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை நிராகரிக்குமாறு கோரிக்கை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தம்மைக் கைது செய்வதை தடுக்கக் கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு இன்று பரிசீலனைக்கு அழைக்கப்பட்ட போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விக்கும் டி அப்ரூ இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மனுவைத் தொடர முடியாது எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4