சிவில் சமூக தலைவர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்த நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ!

Reha
4 years ago
சிவில் சமூக தலைவர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்த  நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ!

அரசியலமைப்பின் உத்தேச 21வது திருத்தம் தொடர்பான கருத்துக்களை முன்வைப்பதற்காக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சிவில் சமூக தலைவர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்துள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடல் நீதியமைச்சில் நேற்று (08) பிற்பகல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதன் நன்மைகள், ஜனநாயகத்தை வலுப்படுத்துவது மற்றும் நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது எப்படி என்பது குறித்து அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சிவில் சமூகம் மற்றும் தொழிற்சங்கங்களின் தலைவர்களுக்கு விளக்கினார்.

இந்த சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும், 50க்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்புகளுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4