நானாட்டான் – அச்சங்குளம் கிராமத்தில் ஆழிப்பேரலை ஒத்திகை!

#SriLanka #Lanka4
Shana
4 years ago
நானாட்டான் – அச்சங்குளம் கிராமத்தில் ஆழிப்பேரலை ஒத்திகை!

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம்  கிராமத்தில் நாளை ஆழிப்பேரலை ஒத்திகை இடம்பெறவுள்ளது.

இதனால் அதனை அண்டிய பகுதியில் உள்ள மக்கள் அச்சமடைய வேண்டாம் என நானாட்டான் பிரதேச செயலாளர் எம். ஸ்ரீஸ்கந்த குமார் தெரிவித்துள்ளார்.

ஆழிப்பேரலை அனர்த்த நடவடிக்கைகளின் போது அதனை எவ்வாறு முகங்கொடுப்பது என்பது குறித்து இதன்போது மக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்தப்படவுள்ளது.

அச்சங்குளம், அறுகுக்குன்று போன்ற கடற்கரையோர பிரதேசங்களில் இந்த ஒத்திகை நிகழ்வானது நாளை முற்பகல் 10 மணி முதல் 12 மணி வரையான காலப்பகுதியில் இடம்பெறவுள்ளதாக நானாட்டான் பிரதேச செயலாளர் எம். ஸ்ரீஸ்கந்த குமார் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4