10வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை

Kanimoli
4 years ago
10வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை

வவுனியா மாங்குளம் பகுதியில் 10வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூளிய சிறைத்தண்டணை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இன்று தீர்ப்பளித்துள்ளார்.

2017 பங்குனி மாதம் பாடசாலை சீருடையுடன் மலசலக்கூடத்தில் வைத்து இரு முறை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளாதாக மாணவி நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.

இச் சம்பவத்தின் பின்னர் பாடசாலைக்கு சென்று வகுப்பாசிரியரிடம் இச்சம்பவத்தை கூறியதாகவும், அதிபருக்கு அறிவிக்கப்பட்டு பின்னர் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதாகவும் மாணவி இதன்போது மேலும் சாட்சியம் அளித்துள்ளார்.

பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்கு குற்றவாளியென தீர்ப்பளித்த வவுனியா மேல் நீதிமன்றம் 10ஆண்டுகள் கடூளிய சிறைத்தண்டணையும், 4 லட்சம் நஷ்ட ஈடும் கட்டத்தவறும் பட்சத்தில் இரண்டு வருட கடூளிய சிறைத்தண்டணையும், 20 ஆயிரம் தண்டப்பணமும் கட்டத்தவறும் பட்சத்தில் இரண்டு மாத கடூளிய சிறைத்தண்டணையும் விதித்து நீதிபதி இளஞ்செமியன் தீர்பளித்துள்ளார்.     

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4