ஜொன்ஸ்டன் எம்.பி யை கைது செய்ய பிடியாணை உத்தரவு

#SriLanka #Court Order #Lanka4
Shana
4 years ago
ஜொன்ஸ்டன் எம்.பி யை கைது செய்ய பிடியாணை உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்கு பகிரங்க பிடியாணையை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

அதற்கமைய ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்த கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

கடந்த மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் தம்மை கைது செய்வதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிப்பேராணையை தாக்கல் செய்திருந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4