அரசாங்க கணக்குகள் தொடர்பான தெரிவுக் குழுவிற்கு அழைக்கப்பட்ட அஜித் நிவாட் கப்ரால்

Kanimoli
4 years ago
அரசாங்க கணக்குகள் தொடர்பான தெரிவுக் குழுவிற்கு அழைக்கப்பட்ட அஜித் நிவாட் கப்ரால்

 சிறிலங்கா நாடாளுமன்றத்தின் அரசாங்க கணக்குகள் தொடர்பான தெரிவுக் குழுவிற்கு P.B. ஜயசுந்தர மற்றும் நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அரசாங்க கணக்குகள் தொடர்பான தெரிவுக் குழுவிற்கு இன்று அழைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் தொடர்பில் அரசாங்க கணக்குகள் தொடர்பான தெரிவுக் குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைவாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம், இன்று பிற்பகல் 2 மணிக்கு அரசாங்க கணக்குகள் தொடர்பான தெரிவுக் குழுவில் முன்னிலையாகுமாறு குறித்த தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

அதனைத்தவிர அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்கள், நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் S.R.ஆட்டிகல உள்ளிட்ட பலரும் இன்று அரசாங்க கணக்குகள் தொடர்பான தெரிவுக் குழுவில் முன்னிலையாகவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4