13 வயதுடைய பாடசாலை மாணவி மாயம்

Kanimoli
4 years ago
 13 வயதுடைய பாடசாலை மாணவி மாயம்

கொஸ்கம சாலாவ தோட்டத்தில் வசிக்கும் 13 வயதுடைய பாடசாலை மாணவி மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சிறுமி கடந்த 5ஆம் திகதி காலை 8 மணியளவில் தான் கல்வி கற்கும் பாடசாலையில் சிரமதானம் இருப்பதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி வீடு திரும்பாததால், சிறுமியின் தாய் பொலிஸில் புகார் அளித்துள்ளார்.

இந்த சிறுமி தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கொஸ்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4