மாயமான யுவதிகள் கொழும்பில் கண்டுபிடிப்பு
Prabha Praneetha
2 years ago
-1-1-1-1-1-1-1-1.jpg)
அக்கரபத்தனையில் விறகு தேடச் சென்றிருந்த நிலையில் கடந்த 6 நாட்களாக காணாமல் போயிருந்த இரண்டு யுவதிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்
குறித்த இருவரும் கொழும்பில் இருப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2ஆம் திகதி காலை 11 மணியளவில் வீட்டில் இருந்து விறகு சேர்க்க சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பாதமையால் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அக்கரப்பத்தனை சென்மார்கட் தோட்டத்தில் வசிக்கும் 15 மற்றும் 18 வயதுகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த இருவரும் தற்போது கொழும்பில் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.



