நாடுமுழுவதும் ஆயுதம் தாங்கிய படையினர்

Kanimoli
4 years ago
நாடுமுழுவதும் ஆயுதம் தாங்கிய படையினர்

சிறிலங்கா அரச தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக கோட்டாபய ராஜபக்சவினால் விசேட கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களின் நலனுக்காகவே இந்தக் கட்ளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பொது மக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் ஈடுபடுத்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த விசேட கட்டளை தொடர்பில் சபாநாயகர் சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

40ஆவது அதிகார சபையான பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது உறுப்புரையில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாகவே அரச தலைவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4