மத்திய வங்கி ஆளுநருக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடா? வெளிவந்த தகவல்
Mayoorikka
2 years ago

தனக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் முரண்பாடு இருப்பதாக கூறப்படும் கூற்றுகளை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கடுமையாக நிராகரித்துள்ளார்.
“ஆளுநருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முரண்பாடு இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவும் சில செய்திகளை இலங்கை மத்திய வங்கி அறிந்துள்ளதாக மத்திய வங்கி ட்வீட் செய்துள்ளது.
மேலும், “மத்திய வங்கி ஆளுநர் இத்தகைய கூற்றுகளை கடுமையாக நிராகரிப்பதோடு, பிரதமரும் ஆளுநரும் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு தொடர்ந்தும் நல்லிணக்கத்துடன் செயற்படுகின்றனர் என்றும் குறித்த ட்வீட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



