நாட்டின் சமூக - அரசியல் சூழல் நிலைமை குறித்து விவாதிக்க தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டம்

Kanimoli
4 years ago
நாட்டின் சமூக - அரசியல் சூழல் நிலைமை குறித்து விவாதிக்க தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டம்

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் இன்று முற்பகல் 10.00 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் சமூக-அரசியல் சூழல் மற்றும் நிலைமை குறித்து விவாதிக்க இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த யோசனைகள் அடங்கிய கடிதத்தை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பியுள்ளது.

அதேநேரம், 2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை அக்டோபர் 31, 2022 க்குள் சான்றளிக்க முடியும் என்று ஆணைக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
 
இதற்கிடையில் நாட்டில் தேர்தல் ஒன்றை நடத்தக்கூடிய தருணம் தற்போது எழவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4