மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய இருவர் பல்கலை மாணவர்கள் மடக்கிப்பிடிப்பு

Kanimoli
4 years ago
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய இருவர் பல்கலை மாணவர்கள் மடக்கிப்பிடிப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்குள்  நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய இருவரை பல்கலை மாணவர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பல்கலை வளாகத்திற்குள் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் பின்னணி
யாழ்.பல்கலையில் நிலைவேந்தலில் கலந்து கொண்ட மாணவிகள் மீது தாக்குதல்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தியாகி பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றிருந்தது.

குறித்த நினைவேந்தல் நிகழ்விற்காக பல்கலைகழக மாணவர்கள் ஒன்றுகூடி நினைவேந்தலில் பங்குகொண்டனர்.


நிகழ்வு முடிவுற்ற பின்னர் அங்கு நின்ற மாணவிகள் மீது வெளியிலிருந்து வந்த இருவர் திடீரென தாக்குதல் நடத்தினர்.

பின்னர் அங்கிருந்த ஆண் மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டபோது ஏனைய மாணவர்கள் ஒன்று சேர்ந்து குறித்த இருவரையும் மடக்கி பிடித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல் துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் தாக்குதல் நடாத்திய இருவரையும் கைது செய்தனர். என தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4