தங்காலை - மொரகட்டியார துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – காரணம் வெளியானது!

Reha
4 years ago
தங்காலை - மொரகட்டியார துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – காரணம் வெளியானது!

தங்காலை - மொரகட்டியார பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் 2 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போதைப்பொருள் விவகாரத்தினால் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கெப் ரக வாகனம் ஒன்றினை இலக்கு வைத்து உந்துருளியில் பிரவேசித்தவர்களால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்தில் கெப் ரக வாகனத்தை செலுத்திய தங்காலை – குடாவெல்ல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவரே உயிரிழந்தார்.

உயிரிழந்தவர், போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என குறிப்பிடப்படுகின்றது.

போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு இடையிலான தனிப்பட்ட முரண்பாடு காரணமாக இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் மற்றும் நேற்று முன்தினம் அஹங்கம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கும் இடையில் ஏதேனும் தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4