தயிர் உட்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி

#SriLanka #Food #Poison
Prasu
4 years ago
தயிர் உட்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி

திருகோணமலை-ரொட்டவெவ பகுதியில் தயிர் உட்கொண்டஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மஹதிவுல்வெவ மற்றும் ஹொரவ்பொத்தானை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 6 பேரும் இன்று (05) காலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 வயது 7 வயது மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் வயிற்று வலி, வாந்தி பேதி காரணமாக மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதேவேளை தாய் மற்றும் இரு சிறார்கள் ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது மாடு மேய்ச்சலில் ஈடுபட்டு வரும் குடும்ப உறுப்பினர் ஒருவர் பாலை தயிராக்கி உட்கொண்டதாகவும் இதனையடுத்து வயிற்றுவலி, வாந்தி பேதி ஏற்பட்டதாகவும் தெரியவருகின்றது.

குறித்த 6 பேரும் தற்பொழுது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4