நாடாளுமன்ற உறுப்பினர் கொலை: இரு சந்தேகநபர்கள் கைது!

Prabha Praneetha
4 years ago
நாடாளுமன்ற உறுப்பினர் கொலை: இரு சந்தேகநபர்கள் கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்டவரில் ஒருவர் 53 வயதான முச்சக்கர வண்டி சாரதி எனவும் மற்றையவர் 27 வயதுடைய ஹப்புத்தளையில் வசிபவர் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக இதுவரை 25 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் விசாரணைகள் துரித கதியில் இடமபெருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4