எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுமே டீசல் விநியோகிக்கப்படும்

Prabha Praneetha
4 years ago
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுமே டீசல் விநியோகிக்கப்படும்

மட்டுப்படுத்தப்பட்ட டீசல் கையிருப்பு காரணமாக முன்னுரிமை பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுமே டீசல் விநியோகிக்கப்படும் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார்.

நாளாந்த விநியோகம் சுமார் 2,500 மெற்றிக் தொன்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது சுமார் 40,000 மெட்ரிக் தொன் டீசல் இருப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.​

எவ்வாறாயினும், இந்திய கடன் வசதியின் கீழ் அடுத்த கப்பல் டீசல் எதிர்வரும் 16 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் பெட்ரோல் வழக்கம் போல் விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4