அரசாங்கத்தை பதவி விலகுமாறு கொழும்பில் மீண்டும் போராட்டம்

Kanimoli
4 years ago
அரசாங்கத்தை பதவி விலகுமாறு கொழும்பில் மீண்டும் போராட்டம்

அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள அரச எதிர்ப்பு போராட்டங்களுக்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில், அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அரச தலைவர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு காலிமுகத் திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள அரச எதிர்ப்பு போராட்டம் 57 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

இந்தப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில், கொழும்பு - புறக்கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலைக்கு காரணமான அரசாங்கத்தை பதவி விலகுமாறு இதன் போது போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஏற்கனவே, அரசாங்கத்திற்கு எதிராக இன்று போராட்டங்களில் ஈடுபடுவோர் கொழும்பு கோட்டையின் பல வீதிகளுக்குள் நுழைவதற்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.

அதற்கமைய, போராட்டக்காரர்கள் யோர்க் வீதி, பேங்க் வீதி மற்றும் செத்தம் வீதி உட்பட சில வீதிகளுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து புறக்கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தியிருந்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4