லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரிப்பு?

Prathees
4 years ago
லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரிப்பு?

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களை அடுத்த வாரமளவில் சந்தைக்கு விநியோகிக்க முடியும் என எதிர்ப்பார்ப்பதாக அந் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதேபோல், லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரிக்கக்கூடும் எனவும் அந்நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 6,000 ரூபாவை விட அதிகரிக்கும் என பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்று (04) விநியோகிக்கப்படாது என நிறுவனம் தெரிவித்துள்ளது.

2,500 மெட்ரிக் தொன்கள் எரிவாயுவுடன் கூடிய கப்பல் ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாட்டை வந்தடைய உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4