ஜனாதிபதிக்கு தனியாக முடிவுகளை எடுக்க முடியாது! – செந்தில் தொண்டமான்

Mayoorikka
4 years ago
ஜனாதிபதிக்கு தனியாக முடிவுகளை எடுக்க முடியாது! – செந்தில் தொண்டமான்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஏற்பாட்டில், பிரதமர் அலுவலகத்தில் சர்வ கட்சித் தலைவர்களுடன் 21வது திருத்தச்சட்ட அமுலாக்கம் தொடர்பான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் நீதி அமைச்சரிடம் அரசியல் கட்சிகளினால் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இதன் போது இ.தொ. கா சார்பில் அதன் தலைவர் செந்தில் தொண்டமான் கருத்து தெரிவிக்கையில்,

எதிர்காலத்தில் பிரதமரை நியமிப்பது தொடர்பாகவும் நீக்குவது தொடர்பாகவும் தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதி முடிவெடுக்க முடியாது என்றும், பாராளுமன்ற அனுமதியுடனே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்தார்.
 
அதற்கு நீதி அமைச்சர் சாதகமாக பதிலளித்ததுடன், அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் 21வது திருத்தச்சட்ட அமுலாக்கம் சமர்பிக்கப்படும் என பதிலளித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4