வடமராட்சி விபத்தில் பாடசாலை மாணவன் பலி!

#SriLanka #Lanka4
Shana
4 years ago
வடமராட்சி விபத்தில் பாடசாலை மாணவன் பலி!

வடமராட்சி குஞ்சர்கடைப் பகுதியில் இன்று காலை 10.00 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் 17 வயதுடைய மாணவன் ஒருவன் உயிரிழந்த நிலையில் மற்றுமொரு மாணவன் காயமடைந்துள்ளான்.

குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் வடமராட்சி கரவெட்டி குஞ்சர் கடை கண்டான் வீதியில் மோட்டார் சைக்கிளில் செலுத்திக் கொண்டிருந்த மாணவனுக்கு முன்னாள் மாடு ஒன்று குறுக்காக சென்றதாகவும், இதனால் பதட்டமடைந்த மாணவன் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்து ஏற்பட்டிருக்கிறது.

உடனடியாகவே காயமடைந்த மாணவர்களை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது மருத்துவமனையில் ஒரு மாணவன் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகலை நெல்லியடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் தற்போது உரிய விசாரணைகளுக்காகவும், உடற்கூற்று பரிசோதனைக்காகவும் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விபத்து சம்பவத்தில் மண்டான் கரணவாய் மேற்கு பகுதியைச் சேர்ந்த செல்வமோகன் வாணிஜன் (வயது 17) என்பவரே மரணமடைந்துள்ளார்.

குறித்த நபர் தற்போது நடைபெற்ற க.பொ.த.சாதாரண தர பரீட்சை எழுதியவர் எனவும் தெரியவந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4