பிரபல வங்கியில் நடந்த கொடூரம்
Kanimoli
2 years ago

பிபில,ஹெவல்வல பிரதேச வங்கி ஒன்றில் பட்டப்பகலில் முகாமையாளரை கத்தியால் குத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது சம்பவத்தில் காயமடைந்த மேலாளர் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முகமூடியுடன் நுழைந்த நபர் தப்பியோட்டம்
பிபில கொட்டகம கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான ஹெவல்வெல கூட்டுறவு கிராமிய வங்கியின் மேலாளரே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.
வங்கிக்குள் திடீரென முகமூடியுடன் நுழைந்த நபர் ஒருவர் மேலாளரை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் பிபில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



