துமிந்த சில்வா மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி

Prathees
4 years ago
துமிந்த சில்வா மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி

வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை  மீண்டும் வைத்தியசாலையில் சேர்க்க சிறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர்இ வெளியேற்றப்பட்ட பின்னர் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போதிலும், அவ்வாறு மன்னிப்பு வழங்கும் முறை தொடர்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு காரணமாக உச்ச நீதிமன்றம் பொது மன்னிப்பை இடைநிறுத்தியுள்ளது.

அதன்படி அவரை கைது செய்து மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4