அரசியல்வாதியின் மகனின் கூட்டாளி மூலம் சபுகஸ்கந்தவுக்கு கச்சா எண்ணெய்?

Mayoorikka
4 years ago
அரசியல்வாதியின் மகனின் கூட்டாளி மூலம் சபுகஸ்கந்தவுக்கு  கச்சா எண்ணெய்?

ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எரிபொருளை அரசாங்கம் பெற்றுக்கொள்ளாவிட்டால் அதற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை சுதந்திர சேவை சங்கத்தின் பெற்றோலியக்  கிளையின் இணைத் தலைவர் ஜகத் விஜயகுணரத்ன தெரிவித்தார்.
 
அண்மையில் இலங்கைக்கு வந்த கப்பல் டுபாயில் இருந்து முகவர் ஒருவரால் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அந்த முகவர் இலங்கையின் பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகனின் நண்பர் என நம்பப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இடைத்தரகர்கள் மூலம் எண்ணெய் பெறும் நடைமுறையை உடனடியாக நிறுத்திவிட்டு, நாடுகளுக்கு நாடுகள்  எண்ணெய் பெறும் முறையான முறையை ஏற்படுத்த எரிசக்தி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலும் இலங்கைக்கு அரசாங்கத்தினால் முதல் எண்ணெய்த் தொகை வழங்கப்பட்டதாகவும், அரசாங்கம் கொமிஷன் பெற முடியும் என்பதனால் அரபு அல்லாத நாடுகளில் இருந்து எண்ணெய் பெறுவதாகவும் அவர் கூறினார்.

நாடு மற்றும் மக்கள் படும் இன்னல்கள் தொடர்பில் எரிசக்தி அமைச்சு கவனம் செலுத்தவில்லை என சுட்டிக்காட்டிய அவர், கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருளை குறைந்த விலைக்கு வழங்க ரஷ்யா இணக்கம் தெரிவித்த போதிலும் அரசாங்கம் அது தொடர்பில் கவனம் செலுத்தாமை சந்தேகத்திற்குரியது எனவும் தெரிவித்தார். .

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4