யாழ்ப்பாணம் - பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் குழுமோதலால் நேர்ந்த விபரீதம்

Kanimoli
4 years ago
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் குழுமோதலால் நேர்ந்த விபரீதம்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற குழு மோதலில் ஐவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை ,கொட்டடியை சேர்ந்த சிறிமுருகன் சிறிஅஜன் (வயது- 23) , வியாபாரிமூலையை சேர்ந்த தேவநாயகம் பிரேம்ராஜ் (வயது-30) , சுப்பர் மடம் பகுதியைச் சேர்ந்தவர்களான ஜீவநாயகம் ராஜீவன் (வயது- 26), பொன்னம்பலம் ரகுநாதன் (வயது- 39) மற்றும் தனபாலசிங்கம் குலசிங்கம் (வயது- 41) ஆகியோரே காயமடைந்துள்ளனர்.

கடற்தொழிலில் ஏற்பட்ட முரண்பாடே மோதலாக மாறியதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், தாம் தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பருத்தித்துறை காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4