இலங்கைக்கு நிபந்தனையுடன் உதவி வழங்க தயாராகும் புலம்பெயர் தமிழர்கள்!

Nila
4 years ago
இலங்கைக்கு நிபந்தனையுடன் உதவி வழங்க தயாராகும் புலம்பெயர் தமிழர்கள்!

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு நிபந்தனையுடன் உதவி தயார் என பைடனுக்கான தமிழர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. 

நாட்டில் நிலவும் இனப் பிரச்சனைக்கு தீர்வு வழங்க இணக்கம் வெளியிட்டால் 52 பில்லியன் டொலர் வழங்க தயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இலங்கை செலுத்த வேண்டிய வெளிநாட்டு கடனை செலுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் தயாராக உள்ளதாக “பைடனுக்கான தமிழர்கள்” அமைப்பின் இயக்குனர் தெரிவித்துள்ளார். 
 
இறையாண்மையுள்ள தமிழ்த்தேசம் பொருளாதாரச் சிக்கலின்றி வாழக்கூடியது. தமிழ் தேசத்தில் பொருளாதாரம், பிற நிறுவனங்களை நடத்துவதற்கு புலம்பெயர் தேசத்தின் திறமையான உறுப்பினர்களை தமிழர்கள் கொண்டு வருவார்கள்.
 
புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கைக்கு அதன் வெளிநாட்டுக் கடனில் 52 பில்லியன் டொலரை செலுத்த உதவுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4