நெடுந்தீவு கடலில் மிதந்து வந்த மர்ம பொதி

Prathees
4 years ago
நெடுந்தீவு கடலில் மிதந்து வந்த மர்ம பொதி

நெடுந்தீவு கடலில் மிதந்து வந்த மர்ம பொதியில் இருந்து 35 போத்தல் பூச்சிக்கொல்லி மருந்து போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.

நெடுந்தீவு கடலில் மர்ம பொதி ஒன்று மிதப்பதாக இன்று (02) கடற்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடற்படையினர் குறித்த பொதியினை மீட்டு சோதனையிட்ட போது, அவற்றில் இருந்து 35 பூச்சிக்கொல்லி மருந்து போத்தல்களை மீட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து இவற்றை கடத்தி வந்த நிலையில் கடற்படையினரை கண்டு கடத்தல்காரர்கள் பொதியினை கடலில் வீசி விட்டு தப்பி சென்று இருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு கடற்படையினர் மற்றும் நெடுந்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4