கொழும்பில் பதிவாகியுள்ள தங்கத்தின் விலை

Prabha Praneetha
4 years ago
கொழும்பில் பதிவாகியுள்ள தங்கத்தின் விலை

இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி தொடர்ந்து வரும் நிலையில் நாட்டில் தங்கத்தின் விலையில் சிறியளவான மாற்றங்களே பதிவாகி வருகின்றன.

இன்றைய தினம் கொழும்பு - செட்டியார் தெருவில் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 186,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 171,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை இலங்கையில் இலங்கையில் நேற்று முன் தினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 189,700 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 173,950 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

அதேபோல் நேற்றைய தினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 188,750 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 173,100.00 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

இந்த நிலையில் தங்க விலையானது சர்வதேச சந்தையில் சரிவினை கண்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது அவுன்ஸிற்கு 12.25 டாலர்கள் குறைந்து, 1,836.15 டாலர்களாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் வெள்ளியின் விலையும் தற்போது அவுன்ஸிற்கு 1.17% குறைந்து, 21.435 டாலர்களாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4