மிருகக்காட்சிசாலை விலங்குகளுக்கு உணவளிப்பதில் பெரும் நெருக்கடி!

Mayoorikka
4 years ago
மிருகக்காட்சிசாலை விலங்குகளுக்கு உணவளிப்பதில் பெரும் நெருக்கடி!

பொருளாதார நெருக்கடி காரணமாக தெஹிவளை மிருகக்காட்சிசாலை உட்பட ஏனைய மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகள் மற்றும் உயிரினங்களுக்கான உணவு விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

இப்பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் துரிதகரமான செயற்படுத்த வேண்டும் என மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  
மேலும் மிருகக்காட்சிசாலைக்கு தேவையான உணவு பொருட்களை விநியோகிக்கும் தரப்பினருக்கு மாத்திரம் 59 மில்லியன் நிலுவை தொகை செலுத்த வேண்டியுள்ளது.

இவ்வருடத்தின் இறுதி பகுதிக்கு தேவையான மானியத்துடன் குறைக்கும் பட்சத்தில் தற்போதைய நிலைமைக்கு அமைய 120 மில்லியன் அளவு நிதி அவசியமாகும்.

இக்காரணிகளை கருத்திற்கொண்டு தேவையான மானியத்தை பெற்றுக்கொள்ள திறைச்சேரியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதாக வனஜூவராசிகள் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4