இலங்கையில் மின்பட்டியல் அடிப்படையில் எரிவாயு விநியோகம்! லிட்ரோ அறிவிப்பு

Nila
4 years ago
இலங்கையில் மின்பட்டியல் அடிப்படையில் எரிவாயு விநியோகம்! லிட்ரோ அறிவிப்பு

மின்பட்டியலின் அடிப்படையில் குடும்பமொன்றுக்கு மாதாந்தம் ஒரு எரிவாயு சிலிண்டர் வீதம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போதைய எரிவாயு பற்றாக்குறையான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பலரும் ஒரே நேரத்தில் பல சிலிண்டர்களை கொள்வனவு செய்து அவற்றை கூடிய விலைக்கு விற்று வருவதாக லிட்ரோ நிறுவனத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தடுக்கும் வகையிலும் அனைவருக்கும் எரிவாயு சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் மின்பட்டியல் அடிப்படையில் எரிவாயு சிலிண்டர் விநியோகம் நடைபெறவுள்ளது.

தற்போதைய நிலையில் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் நடைபெறும் குளறுபடிகள் அத்தனையும் அதன் மூலம் முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்றும் லிட்ரோ நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4