சாதாரண தரப் பரீட்சையின் போது மாணவிக்கு தொந்தரவு செய்த மேற்பார்வையாளர் விளக்கமறியலில்

Prathees
4 years ago
சாதாரண தரப் பரீட்சையின் போது மாணவிக்கு தொந்தரவு செய்த  மேற்பார்வையாளர் விளக்கமறியலில்

இந்த வருடம் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவியொருவர் பரீட்சை மண்டப மேற்பார்வையாளரினால் பாலியல் இடையூறுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சாதாரண தரப் பரீட்சை அட்டவணைப்படி கடந்த 25 ஆம் திகதி வரலாறு பாடப்பரீட்சை நடைபெற்றிருந்தது.

இதன்போது வழங்கப்பட்ட இடைவேளை காலப்பகுதியில் பரீட்சை மண்டப மேற்பார்வையாளரால் குறித்த மாணவி பாலியல் இடையூறுக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் இந்த மாணவி தனது பெற்றோருடன் ஹிதோகம காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கையொன்றை சமர்பிக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பரீட்சைகள் ஆணையாளருக்கு பணித்துள்ளதாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டுள்ள மாணவி, பரீட்சை நிலைய பொறுப்பதிகாரி, உதவி பரீட்சை நிலைய பொறுப்பதிகாரி, பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாகவும் குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4