அட்டுலுகம சிறுமி ஆயிஷா கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

Mayoorikka
4 years ago
அட்டுலுகம சிறுமி  ஆயிஷா கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

அட்டுலுகம சிறுமியான ஆயிஷா கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் உள்ள பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு  முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (31) காலை இடம் பெற்றது. 
 
வன்கொடுமைக்கு உட்படுத்தப்படும் சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் நீதிகோரி வடகிழக்குப் பெண்கள் ஒன்றியத்தினால் இக் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதையடுத்து, சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை நிறுத்தக்கோரிய பதாகைகளை ஏந்தியவாறும் மற்றும் நீதியை பெற்றுக் கொடுக்குமாறும் என்பதை நோக்காக கொண்டு இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில்,  இப்போராட்டமானது நீதிக்கான போராட்டமாக முன்னெடுக்கப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்ட சிறுமியான ஆயிசாவுக்கும் நீதி கோரி பெண்கள்,  இளைஞர்- யுவதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும்  கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4