இலங்கையில் உயர்தரமான தேயிலைத்தூள் உற்பத்தி செய்வதில் சிக்கல்-தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம்!

Nila
4 years ago
இலங்கையில் உயர்தரமான தேயிலைத்தூள் உற்பத்தி செய்வதில் சிக்கல்-தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம்!

எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டு காரணமாக தென்னிலங்கை தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை, மின்வெட்டு என்பன காரணமாக ஏராளம் நெருக்கடிகளை தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் எதிர்கொண்டுள்ளனர்.

அத்துடன் உற்பத்திக்கான செலவும் அதிகரித்துள்ளதுடன், அதனை ஈடுகட்டப் போதுமான அளவில் தேயிலை உற்பத்தியும் நடைபெறாத நிலை ஏற்பட்டுள்ளது.

தேயிலைத் தொழிற்சாலைகளை இயக்குவதற்கு டீசல் தேவை என்ற போதிலும் அண்மைக்காலமாக நாட்டில் டீசலுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

இதன் காரணமாக உயர்தரமான தேயிலைத்தூள் உற்பத்தி செய்வதிலும் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலை தொடர்ந்தும் நீடித்தால் தமக்கு தேயிலைத் தொழிற்சாலைகளை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அதன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4