இருதய சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்படும்; வைத்தியர்கள் எச்சரிக்கை

Mayoorikka
4 years ago
இருதய சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்படும்; வைத்தியர்கள் எச்சரிக்கை

எதிர்வரும் ஜூன் மாதம் முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்படுமென இருதய நோய் நிபுணர் மருத்துவர் கோத்தபாய ரணசிங்க கூறுகிறார்.

சத்திரசிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறையே இதற்குக் காரணம் என அவர் குறிப்பிட்டார்.

சராசரியாக, தேசிய மருத்துவமனையில் ஒரு நாளைக்கு நான்கு இருதய சத்திரசிகிச்சைகள் செய்யப்படுகின்றன, மேலும் அந்த எண்ணிக்கை இப்போது குறைக்கப்பட்டுள்ளது.

இருதய நோயாளிகளுக்கு அத்தியாவசியமான தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், இதனால் இருதய நோயாளிகள் அதிக ஆபத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதய சத்திர சிகிச்சையின் போது வழங்கப்படும் பல அவசர மருந்துகளுக்கு வைத்தியசாலையில் தட்டுப்பாடுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4