புதிய அமைச்சர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது - பிரதமர்

#SriLanka #Minister
புதிய அமைச்சர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது - பிரதமர்

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு, அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவியேற்போர் அமைச்சர்களுக்கான சம்பளம் மற்றும் சலுகைகளை பெற்றுக்கொள்ளாத வகையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று எரிபொருள் நெருக்கடி நிலைமை தொடர்பில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார். அது தொடர்பில் பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண்பற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் அதேவேளை, அமைச்சர்கள் நியமனம் தொடர்பிலும் சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அமைச்சர்களாக நியமிக்கப்படுவோர், சம்பளத்தை பெற்றுக்கொள்ள மாட்டார்கள். அதேபோன்று அமைச்சர்களுக்கான சலுகைகளை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4