ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி மன்னாரில் போராட்டம்!

#Mannar #Sexual Abuse #Protest
Prasu
4 years ago
ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி மன்னாரில் போராட்டம்!

சிறுமி ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி இன்று (செவ்வாய்க்கிழமை) மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நீதிக்கான போராட்டம் வடக்கு ,கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

அதற்கமைய,  மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகவும் இன்று காலை 10.30 மணியளவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளடங்களாக பல நூற்றுக்கணக்கான பெண்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றினைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

சிறுமி ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரியும் தொடர்ச்சியாக நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கவும் அவ்வாறான செயற்பாடுகளால் பாதிக்கப்படும் பெண்கள் சிறுவர்களுக்கு விரைவில் நீதி நிலைநாட்டப்படவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4