இன்று முதல் சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்கு

Mayoorikka
3 years ago
இன்று முதல் சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்கு

நாட்டில் இன்று நண்பகலின் பின்னர் சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்பும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இன்றைய தினம் 50,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவற்றில் 60 சதவீதமான விநியோகம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் விநியோகஸ்த்தர்கள் தொடர்பான விபரங்கள் லிட்ரோ நிறுவனத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தினமும் 50,000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.

மேலும் 25,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை தாங்கிய கப்பல் இந்த வார இறுதியில் நாட்டை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!