யாழில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு (Photos)

Mayoorikka
4 years ago
யாழில் புகையிரதத்தில் மோதி   ஒருவர் உயிரிழப்பு (Photos)

யாழ்ப்பாணம் - அரியாலை பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட புகையிரதத்துடன் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துளள்னர். 

அதேவேளை குறித்த பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவை உள்ளதாகவும் , அதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறுவதாகவும், தமக்கு பாதுகாப்பான புகையிரத கடவையை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4