2022 நல்லூர் கந்தனின் வருடாந்த பெருவிழா; காளாஞ்சி கையளிப்பு

#SriLanka #Nallur #Festival
2022 நல்லூர் கந்தனின் வருடாந்த பெருவிழா; காளாஞ்சி கையளிப்பு

பிரசித்தி பெற்றா யாழ் நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த பெருவிழா நாட்காட்டி அடங்கிய காளாஞ்சி யாழ். மாநகரசபையினருக்கு ஆலயத்தினரால் கையளிக்கப்பட்டது.

நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த பெருவிழா வரும் ஓகஸ்ட் 2ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளன.

இந்நிலையில், நல்லூர் கந்தன் பெருவிழாவுக்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்தல், வீதி தடைகள் அமைத்து சீரான போக்குவரத்துக்கு வழிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் யாழ். மாநகரசபையினருக்கு ஆலய சம்பிரதாய முறைப்படி இன்றைய தினம் பெருவிழா நாட்காட்டி அடங்கிய காளாஞ்சி ஆலயத்தினரால் கையளிக்கப்பட்டது.

மேலும் காளாஞ்சி வழங்கும் வைபவத்தின்போது பாரம்பரிய முறைப்படி யாழ். மாநகரசபை வளாகத்தில் வாழை, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4