சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விசேட வாராந்த விடுமுறை திட்டமொன்று அறிமுகம்

Prabha Praneetha
4 years ago
 சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விசேட வாராந்த விடுமுறை திட்டமொன்று அறிமுகம்

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விசேட வாராந்த விடுமுறை திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய சுகாதாரத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் வார நாட்களில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.

சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் முன்னுரிமை அளிக்கும் வகையில் வழங்கப்பட்ட அட்டையும் பயனற்றுப் போயுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது.

குறிப்பாக குறித்த அட்டையைப் பயன்படுத்தி எரிபொருள் நிரப்ப முயற்சித்த சில மருத்துவர்கள் அச்சுறுத்தப்பட்டிருந்ததுடன் அவர்கள் மீது தாக்குதல் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையிலேயே சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விசேட வாராந்த விடுமுறை திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4